ICODE.LK / SRI LANKA

உங்கள் வணிகத்திற்கான
தொழில்நுட்பத் துணை.

iCode.lk — மட்டக்களப்பிலிருந்து இலங்கை முழுவதும் வணிகங்களுக்கான POS, பில்லிங் மென்பொருள், இணையத்தளங்கள், மொபைல் செயலிகள் மற்றும் டிஜிட்டல் சேவைகள்.

உங்கள் வணிகத்திற்கு ஏற்ற மென்பொருள்

கடை, உணவகம், மொபைல் விற்பனை நிலையம், வாகன சேவை நிலையம் அல்லது கல்வி நிறுவனத்திற்கு ஏற்ற செயல்முறைகளை முதலில் கலந்துரையாடுவோம். பில்லிங், கையிருப்பு, வாடிக்கையாளர் கணக்கு மற்றும் அறிக்கைகள் போன்ற தேவைகளுக்கு ஏற்ற அமைப்பைத் தேர்வு செய்யலாம். தேவையான modules, users மற்றும் branches ஆகியவை quotation-ல் உறுதி செய்யப்படும்.

நெகிழ்வான சந்தா மற்றும் தெளிவான பதிவுகள்

மாதாந்தம், 3 மாதங்கள், 6 மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கான கட்டண முறையைப் பற்றிக் கலந்துரையாடலாம். Invoice-ல் தொகை, தள்ளுபடி, கட்டணத் தேதி மற்றும் சேவைக்குரிய காலப்பகுதி தெளிவாக இருக்கும். Customer portal மூலம் invoice பார்க்கவும் print செய்யவும் payment slip சமர்ப்பிக்கவும் support பெறவும் முடியும்.

மென்பொருளுடன் தொடரும் சேவை

iCode இலவச demonstration, இலவச after-sales service மற்றும் 24 மணி நேர support வழங்குகிறது. கணினி, laptop, phone, POS printer மற்றும் barcode scanner போன்ற சாதனங்களுக்கும் தொடர்புகொள்ளலாம். தற்போதைய விலை, கிடைக்கும் நிலை மற்றும் warranty விவரங்களை வாங்குவதற்கு முன் உறுதி செய்யுங்கள்.

இலங்கை முழுவதிலிருந்தும் தொடர்புகொள்ளலாம்

கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கண்டி அல்லது வேறு எந்த மாவட்டத்திலிருந்தும் online consultation மற்றும் demonstration பற்றித் தொடர்புகொள்ளலாம். உங்கள் வணிகத் தேவையைத் தெளிவாகச் சொன்னால் அதற்குரிய quotation பெறலாம்.

Let’s chat